புதிய நாடாளுமன்ற(parliament) கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் 23 ஆம் தேதி திறந்து வைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 11-ல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது.
இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பொது சிவில் சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும் அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்,புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் குழு புகைப்படம்( Group Photo in parliament)எடுத்துக்கொண்டனர்.
தற்பொழுது இந்த புகைபடம் இணையத்தில் வைரலாகி வருகிறது.