Parliamentary Election Campaign : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
இதில், தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு அதே தேதியில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் , கேரளாவில் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-வது கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக மே 7 ஆம் தேதியும், 4-ஆம் கட்டமாக மே 13 ஆம் தேதியும், 5-ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும், 6 மற்றும் 7-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் பரப்புரையின் போது கட்சிகள் கையாள வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
அவை :
- தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்த கூடாது
- பரப்புரையின் போது, கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும்
- பரப்புரையின் போது மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ யாரையும் விமர்சிக்க கூடாது
- பரப்புரையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பத் தகுந்த செய்திகளை போல சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் Parliamentary Election Campaign.
அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளார்.
அதன்படி, 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து,
கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 24.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31.03.2024 வரை முதல் கட்டமாக,
தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்”
- 24.3.2024 திருச்சிராப்பள்ளி தொகுதியில் நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
- 26.3.2024 தூத்துக்குடி தொகுதியில் விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடல் ஆகிய இடங்களில் மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
- 26.3.2024 திருநெல்வேலி தொகுதியில் வாகையடி முனையில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
- 27.3.2024 கன்னியாகுமரி தொகுதியில் நாகராஜா கோவில் திடல் நாகர்கோவிலில் மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
- 27.3.2024 தென்காசி தொகுதியில் 18ம் படி கருப்பசாமி கோவில் அருகில், வீரசிகாமணி ரோடு சங்கரன் கோவிலில் இரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் – முதல் கட்டம் – முழு விபரம்!!