நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் (Parliamentary Elections) ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள், 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிப் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் (Parliamentary Elections) ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது..,
“மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி!
அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார்,
மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே” என மன்சூர் அலிகான் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.