Prakashrajஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இல்லாமல் போய்விடும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கபட்ட 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.இதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதில் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதனை தொடர்ந்து, 2ம் கட்ட மக்களவை தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று வருகிறது.
2 ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள்:
கேரளா (20 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), அசாம் (5), சட்டீஸ்கர் (3), கர்நாடகா (14), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் 194 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இல்லாமல் போய்விடும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறும்போது, “தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர். ஒட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
எனது வாக்கு எனது உரிமைக்காக நிற்கிறது. அது என்னைப் பிரதிநிதித்துவம் செய்பவரை, நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் ஒலிப்பது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான எனது அதிகாரம் என்று கூறினார்.