பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில், பாலத்தின் மீது பேருந்து (passenger bus) ஒன்று மோதி தீப்பிடித்ததில் 40 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் நகரிலிருந்து சென்றுகொண்டிருந்த
அந்தப் பேருந்து (passenger bus) பலுசிஸ்தானில் பாலத்தின் வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தூண் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அலாஸ்பேலா மாவட்டத்தின் மூத்த அதிகாரி ஹம்சா அஞ்சும் கூறுகையில், இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு இருக்கிறது எனவும்,
மேலும், 48 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு தூணின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், இந்த விபத்தில் மூன்று பேர் மட்டும் உயிர் பிழைத்து உள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்து பற்றி அவர் கூறுகையில்,பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவேளை தூங்கி இருக்கலாம், மேலும் வேகமாக பேருந்தை இயக்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்திற்கான காரணங்கள் என்னவென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உடல் பாகங்கள் மோசமாக சிதைந்து உள்ள நிலையில், உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் சாலைகளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.