உத்தரப் பிரதேச பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சண்டிகரில் இருந்து திப்ருகர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ஜிலாஹி ரயில் நிலையத்திற்கும் கோசாய் திஹ்வாவிற்கும் இடையே வந்துகொண்டிருந்த போது ரயில் திடீரென தடம் புரண்டது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த கோர விபத்தில் ரயிலின் 10 முதல் 15 பெட்டிகள் தடம் புரண்டது. ரயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து வந்த மீட்டு குழுவினர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீது பணியில் ஈடுபட்டனர் .
Also Read : மருங்கூர் அகழாய்வில் பழங்கால ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கண்டெடுப்பு..!!
இந்த விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டை உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.