புரட்சித்தாய் சின்னம்மா, டி.டி.வி. தினகரன் ஓ.பி.எஸ் ஆகியோரை தவிர்த்து விட்டு, எடப்பாடி பழனிச்சாமி களத்திற்கு வந்தால் மக்கள் அவரை புறக்கணிப்பார்கள் (Edappadi’s autocratic) அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் கூட கிடைக்காது.
எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சையதிகாரப் (Edappadi’s autocratic) போக்கை தேர்தலில் மக்கள் எதிர்ப்பார்கள்- தனியரசு
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு ஓ.பி.எஸ் அவர்களைச் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்திய பின்பு மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு:
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வலிமையாக கட்டமைக்கப்பட்ட இயக்கம் அதிமுக….
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேச ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அணி வாக்குகள் சிதறாமல் வலிமையாக இருக்கின்றது.ஆனால்
அதிமுகவில் ஒற்றுமை இல்லாமல் தடுமாற்ற நிலை இருக்கிறது.
கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஓ பன்னீர் செல்வம் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தேன்.
பொதுவாக அ.தி.மு.க கொஞ்சம் தேர்தலில் தடுமாற்றத்தோடு இருப்பதாக தெரிகிறது,கட்சியை வலுப்படுத்தி வெற்றிக்காக பாடுபடுவதில் தோழமைக் கட்சிகளை சந்திப்பதையும் பார்த்து வருகிறோம்..
ஓபிஎஸ் இல்லாவிடில் அதிமுக வின் ஒன்றைரை கோடி தொண்டர்கள் தனியாக எடப்பாடியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்… அவரின் எதேச்சதிகார போக்கை தேர்தலில் மக்கள் எதிர்ப்பார்கள்.
புரட்சித்தாய் சின்னம்மா, டி.டி.வி. தினகரன் ஓ.பி.எஸ் ஆகியோரை தவிர்த்து விட்டு,எடப்பாடி பழனிச்சாமி களத்திற்கு வந்தால் மக்கள் அவரை புறக்கணிப்பார்கள் என்றார் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் கூட கிடைக்காது என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்..
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திமுக சார்பாக போட்டியிடுவதற்கு உங்களிடம் கூறிய பின்பு தான் வேட்பு மனு வாங்குவோம். உங்களிடம் கூறிய பின்பு தான் வேட்பாளரை அறிவிப்போம். சட்டமன்ற இடை தேர்தலுக்கு எங்களோடு இணக்கமாக உள்ள கட்சித் தலைவர்களை நாங்களும் சந்தித்து வருகிறோம் அவர்களும் எங்களை சந்தித்து வருகிறார்கள் என்றார்.