90ஸ் கிட்ஸ்-ன் நெஞ்சில் இன்று வரை குடியிருக்கும் பல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் பல கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ஷகிலா தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் .
குறிப்பிட்ட வயதுக்கு மேல் எந்த வித படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த ஷகிலா, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதுநாள் வரை ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்த்து வந்த சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று அன்போடு அழைத்து வருகின்றனர் . இந்த செய்தியை அவரே பல பேட்டியில் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாகவும் கூறப்படுகிறது .
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஷகிலா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : என்னை குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் பொய்யானது. எனக்கு பிளாட் ,சொகுசு பங்களா , BMW காரும் இருப்பதாக பலர் கூறுகின்றனர் . ஆனால் உண்மையில் நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.
ஒரு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு மட்டும் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினேன். நன்றாக சம்பாதித்தேன் ஆனால் என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்து கொண்டார் என்று நடிகை ஷகிலா வருத்தத்துடன் கூறியுள்ளார் .