இயற்கையாக அறுவடை செய்யப்படும் புகையிலையை (tobacco) விற்பனை செய்யத் தடையில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழமைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் சேர்ப்பார்கள்.
இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுவார்கள். எனவே, புகையிலையினால் மட்டுமல்லாமல்,
அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருள்களும் சேர்வதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதுடுமல்லாமட்மல் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.
குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.
இந்நிலையில், பான் பராக், குட்கா போன்ற போதை பொருட்களைப் போல் இயற்கையாக விளையும் புகையிலையையும் (tobacco) விற்பனை செய்ய,
தஞ்சாவூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு, இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இயற்கை புகையிலையை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தார்.
இயற்கை புகையிலையில், வெல்லம் கலந்த நீரைத் தெளித்து, எந்த ஒரு வேதியியல் பொருளையும் சேர்க்காமல் விற்பனை செய்யலாம் என அவர் தெரிவித்தார்.