சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக NIA விசாரணை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகல் 03.00 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் குண்டு வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவரை காவல் துறையினர் கைது செய்து. வெடிபொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கருக்கா வினோத் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால் கடந்த நவம்பர் 11ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
ஆளுநர் மாளிகை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர் உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் மாளிகை கூறிய நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டு தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது.
ஆளுநர் மாளிகை பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடத்திய சில தினங்களுக்கு முன்னர் தான் கருக்கா வினோத் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் போது பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட காவல்துறையினர் இந்த வழக்கு (NIA ) தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்களுடன் நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினரிடம் NIA அதிகாரிகள் நிகழ்ந்த குறித்து விளக்கம் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து NIA விசாரணை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.