பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 104 ரூபாய் 83 காசுகளாகவும் , டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 92 காசுகளகவும், விற்பனையான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 25காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.