தமிழில் டாடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
மஸ்கட்டில் பிறந்து வளர்ந்தவர் அபர்ணா தாஸ் கோவையில் கல்லூரி படிப்பை முடித்தார்.படித்து முடித்த பிறகு கணக்காளராக பணியாற்றினார்.
இந்த நிலையில், டிக் டாக் வீடியோ மூலம் அபர்ணா தாஸ் மிகவும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில்அபர்ணா தாஸ் நடிகையாக அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா நடித்திருந்தார் .
இப்படத்தில் அவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை அபர்ணா தாஸுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இந்த சூழலில் தான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீபக் பரம்போலை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் மனோகரம் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களிடையே காதல் மலர்ந்தது உள்ளது. இதனையடுத்து அபர்ணாவும், தீபக்கும் சில காலமாக காதலித்து வந்தார்கள்.
இந்த நிலையில் அபர்ணா, தீபக்கின் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
ஏப்ரல் 24ம் தேதி அபர்ணா தாஸுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.