மார்கழி மாதம் என்றால் மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்த மாதம் .அதிலும் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும்.
அதிலும் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிப்பட்டால் பலவிதமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.குறிப்பாக மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது.
தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு:
இந்த நிலையில் மார்கழி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமர்சையாக நடைபெறும். மார்கழி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அதில் மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருநீறு, திரவிய பொடி, எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கும் முறை:
பிரதோஷ தினம் என்றால் அது மாலை நான்கு மணி தான்.அதிலும் பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானையும் சேர்த்து வணங்கிவர வேண்டும். பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்க வேண்டும்.