கனடாவில் விமானம் ஒன்று தரையிறங்கும் பொது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கடும் பனிபொழிவால் தரையிறங்க சிரமப்பட்டது இதையடுத்து விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விமானம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து விமானத்தில் இருந்த 80 பேரையும் அவசரகால மீட்பு குழுவினர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் , விமானம் தலைகீழாக விழுந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்படுவதும், மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்படுவதும் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று வைரலாகி வருகிறது.
மேலும் இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , அதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.