BREAKING | 2023, ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:
www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலாக (Statement of Marks) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மேலும் Notification பகுதியில் “HR SEC FIRST YEAR JUNE/JULY 2023 PROVISIONAL CERTIFICATE DOWNLOAD” STOOTI வாசகத்தினை Click செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண்(Roll No) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை (Statement of Marks) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
01,06-2023மற்றும் 02.08.2023ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துக்கொள்ளலாம்.
பணம் செலுத்தும் முறை:
தேர்வர்கள் விடைத்தாள் நகல் 1 மறுகூட்டல்-I க்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள சம்மந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல்-இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை:
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வெண் மற்றும் பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.