இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் (PM IN Festival) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருட வருடம் 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாட மக்கள் அனைவரும் வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர் .
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிள்ளது .
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை போகியுடன் சிறப்பாக தரமாக தொடங்கியுள்ளது . போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால் சில பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை விழாவை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திரே மோடி பங்கேற்றுள்ளார்
(PM IN Festival) வேஷ்ட்டி சட்டை அணிந்து மிடுக்காக வந்த பிரதமர் மோடியை மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பிரதமரும் பொங்கல் வைத்து கொண்டாடினார் .
இந்த விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி முதலில் அனைவர்க்கும் “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்“ என தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
Also Read : https://itamiltv.com/pongal-awards-to-3184-police-officials/
விளைவித்த நெல்மணிகளை பொங்கலின் போது இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்புடையவை.
தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது.
பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம் செய்கின்றது. சிறுதானியங்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர் என்று கூறியுள்ளார்.