வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிராக உங்க அரசு நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.. அதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?என்ற கேள்விக்கு பிரதமர்(pm modi) மனம் திறந்து உள்ளார்.
பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றார். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன்-அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் பைடனும்-பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பின்னர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன், பிரதமர் மோடியின் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.அப்போது பேசிய கால நிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு,குவான்டம் கம்யூட்டிங், உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்ததார்.
தொடர்ந்து பேசிய அவர்,மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிராக உங்கள் அரசு நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன; அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு,பதிலளித்த பிரதமர் மோடி, “ஜனநாயகம் எங்கள் DNA.. ஜனநாயகம் எங்கள் ஆன்மா.. ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது.. ஜனநாயக நாட்டில் நாங்கள் வாழ்கிறோம் சாதி,சமயம், மொழி ,இனம் ,ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஜனநாயகம் வழங்க வேண்டும் என்று நான் கூறுகையில்,
பாகுபடுகளுக்கு முற்றிலும் இடமில்லை. ஜனநாயகத்தை பற்றி பேசும் பொது,அதில் மனித விழுமியங்களோ, மனிதநேயமோ,மனித உரிமைகளோ இல்லையென்றால் அது ஜனநாயகம் இல்லை எனக்கூறி விளக்கமளித்த பிரதமர் மோடி 2014ம் ஆண்டு பிரதமரான பிறகு, செய்தியாளர்களின் கேள்விக்கு 2வது முறையாக பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.