Guindy Hospital | குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற விழாவில், சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மையத்தை (National Centre for Aging), பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும்
ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனை உட்பட தமிழகத்தில் மொத்தம் ரூ.313.60 கோடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Mafa Pandiarajan | நான் பாஜகவில் இணைகிறேனா? – முற்றுப்புள்ளி வைத்த அதிமுக அமைச்சர்!
மேலும் இதில் ,புறநோயாளிகள் பிரிவு, அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை,
நாள்பட்டவலி மற்றும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை, இதயமருத்துவம், சிறுநீரக மருத்துவம்,மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம்,புனர்வாழ்வு
மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன.
பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் இங்குவழங்கப்படும். இதற்காக அதிநவீன உபகரணங்களும் வரவுள்ளன.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1761982339180367982?s=20
மூத்த குடிமக்களின் நலனுக்காக, இந்தியாவில் தில்லி எய்ம்ஸ்சுக்கு அடுத்தப்படியாக திறக்கப்படும் இரண்டாவது சிறப்பு மருத்துவமனை இதுவாகும்.
சென்னையில் 2019-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை(Guindy Hospital), முதியோர் நல மையமாக செயல்படவிருக்கிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை கிங்ஸ் நிறுவன வளாகம் ஆகிய இரண்டிலும்
அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்திற்கான விதையை 17 ஆண்டுகளுக்கு முன் விதைத்ததும்,
அவற்றுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய நான் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.