பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை ( Nalanda University ) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் தான் நாளந்தா பல்கலைக்கழகம் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
Also Read : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்..!!
இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பழமையான பல்கலைக்கழகத்தை தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. சுமார் 1749 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர வி. அர்லேகர், ( Nalanda University ) முதலமைச்சர் நிதீஷ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.