ரஷியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ரஷ்யா நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார்.
2 முறை பிரதமராக இருந்த நரேந்திர மோடி தற்போது 3 ஆவது முறையாக பிரதமராகி உள்ள நிலையில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று ரஷியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் .
பிரதமர் மோடியின் இந்த அரசுமுறை பயணம் வருகிற 8-ம் தேதி இன்று முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read : அதிமுகவில் தலைமை மாற்றப்பட வேண்டும் – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
8 மற்றும் 9-ம் தேதிகளில் மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா – ரஷியா இடையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அத்துடன், மாஸ்கோ மற்றும் வியன்னாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து ஆஸ்திரியா நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். திட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரிய நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.