பிரதமர் மோடி வருகையையொட்டி இலங்கை சிறைகளில் உள்ள ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டையை சேர்ந்த 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இந்தாண்டு தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடை பெறுகிறது.
இந்த போட்டிகளை தொடங்கி வைக்க நேற்று மாலை சென்னைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு இன்று காலை தனி விமானத்தில் திருச்சிக்கு சென்றார்.
உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக, விரதம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி பல்வேறு கோவில்களுக்கு சென்று வருகிறார்.
அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழும் தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார்.
பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை
இதற்காக இன்று காலை 8:30 மணிக்கு திருச்சி சென்றடைந்த பிரதமர் மோடி, 11:00 மணிக்கு காரில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார் அங்கு பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.
கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
https://x.com/ITamilTVNews/status/1748592889545035778?s=20
இதனை அடுத்து இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யவுள்ளார்.
தமிழக மீனவர்கள் விடுதலை?
இந்த நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரக வழக்கறிஞர்கள் இலங்கை நீதிமன்றங்களில் மீனவர்களை விடுவிக்க மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படியுங்க : Trichy Srirangam- பிரதமர் வருகையால் பக்தர்களுக்கு தடை!
இதற்கு இணங்க நல்லெண்ண அடிப்படையில் யாழ்ப்பாணம் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை முடிவு எடுத்துள்ளது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரும் , நாகை மாவட்டம் மீனவர்கள் 10 பேர் என 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றே தமிழகம் திரும்புவார்கள் என்று மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.