உத்தரகாண்டின் பார்வதி குண்ட்டில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி(PM Modi), பொதுமக்களிடம் உரையாடி முதியவர்களிடம் ஆசி பெற்றார்.
4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் சென்றார்.
இதனை முன்னிட்டு, பார்வதி குண்ட் பகுதியில் உள்ள பார்வதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் மோடி உரையாடினர்.
அதனைத் தொடர்ந்து, கஞ்சி கிராமத்திற்குச் சென்ற அவர், பொதுமக்களிடம் கலந்துரையாடியதுடன், முதியோர்களிடம் ஆசி பெற்றார்.
ல்மோரா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜகேஷ்வர் தாம் கோயிலிலும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
சந்நிதியில் பூக்களை வைத்து, தீபாராதனை ஏந்தி வழிபாடு நடத்தினார்.