பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அன்று பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலப்படத்தை அறிமுகம் செய்து, சூரிய சக்தி மற்றும் மரபுவழி எரிசக்தியில் இயங்கும் சமையல் முறையை அறிமுகப்படுத்தி, பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்தியா எனர்ஜி வீக் (IEW) 2023, பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெற இருக்கிறது. இது அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், “இந்த நிகழ்வு பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற எரிசக்தித் துறை, அரசாங்கங்கள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, ஒரு பொறுப்பான ஆற்றல் மாற்றம் வழங்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கும்” தெரிவித்துள்ளது.
மேலும், 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலந்த பெட்ரோலையும் மோடி அறிமுகப்படுத்த இருக்கிறார்.
“எத்தனால் கலப்பு சாலை வரைபடத்திற்கு ஏற்ப, 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் 84 சில்லறை விற்பனை நிலையங்களில் E20 (பெட்ரோலுடன் 20% எத்தனால் கலவை) எரிபொருளை பிரதமர் தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனாலை முழுமையாகக் கலப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது எனவும், இதற்காக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் 2G-3G எத்தனால் ஆலைகளை நிறுவுகின்றன, அவை முன்னேற்றத்தை எளிதாக்கும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதனையடுத்து, பசுமை இயக்க பேரணியையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தப் பேரணியில், பசுமை எரிசக்தி ஆதாரங்களில் இயங்கும் வாகனங்கள் பங்கேற்பதுடன், பசுமை எரிபொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த உதவும்.
தொடர்ந்து, இந்தியன் ஆயிலின் ‘அன்பாட்டில்ட்’ முயற்சியின் கீழ் அவர் சீருடைகளை அறிமுகப்படுத்துவார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிப்பதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், இந்தியன் ஆயில், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் (rPET) மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட சில்லறை வாடிக்கையாளர் உதவியாளர்கள் மற்றும் LPG விநியோக பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்க உள்ளது.
இந்தியன் ஆயிலின் வாடிக்கையாளர் உதவியாளர்களின் ஒவ்வொரு சீருடையும் சுமார் 28 பயன்படுத்திய PET பாட்டில்களை மறுசுழற்சி செய்வதை ஆதரிக்கும். மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டரில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்காகத் தொடங்கப்பட்ட நிலையான ஆடைகளுக்கான பிராண்டான ‘அன்பாட்டில்ட்’ மூலம் இந்தியன் ஆயில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த பிராண்டின் கீழ், இந்தியன் ஆயில் மற்ற எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் உதவியாளர்களுக்கான சீருடைகள், ராணுவத்திற்கான போர் அல்லாத சீருடைகள், நிறுவனங்களுக்கான சீருடைகள்/ ஆடைகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய இலக்கு வைத்துள்ளது.
இந்தியன் ஆயிலின் உட்புற சோலார் சமையல் அமைப்பின் இரட்டைக் குக்டாப் மாடலையும் பிரதமர் அர்ப்பணித்து, அதன் வணிகப் பயணத்தைத் தொடங்கி வைக்கிறார்.
“பசுமை ஆற்றலை சீராக வழங்குவதற்காக, 2023-24 பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பசுமை எரிபொருள், பசுமை ஆற்றல், பசுமை விவசாயம், பசுமை இயக்கம், பசுமை கட்டிடங்கள் மற்றும் பல திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.