நாடாளுமன்றத் தேர்தலுக்காக சிதம்பரம் ,விழுப்புரம், தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை மனதில் வைத்து பாமகவுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் பேசி வருவதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மேல்பாதியில் திரௌபதை அம்மன் கோயில், கரூர் வீரணம்பட்டி காளியம்மன்கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் நிலவியது.இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள்கோயிலை பூட்டி முத்திரையிட்டுள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமக குறித்தும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பாலு மீது கடுமையான விமர்சனங்களை திருமாவளவன் முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, திருமாவளவன் பேசியது அதிர்ச்சி அளிப்பதாகவும் அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் பேசி இருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பொது வெளியில் பேசியது தவறானது.மேலும் மோடி சமூகத்தைப் பற்றி ராகுல் காந்தி பேசியதால் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பாலு தெரிவித்தார்.