ஒரே அணியில் இருக்க மாட்டோம் என்ற கருத்து தெரிவித்த விசிக(vck) மற்றும் பாமக கட்சிகள் தற்பொழுது ஒரே தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன்(Thirumavalavan) சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
அதனால் இந்த முறை தொகுதி மாறலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் சிதம்பரம் தொகுதிகள் நிற்கப் போவதாக விசிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரையும் முடுக்கிவிட்டு கட்சிப் பணியை தொடங்க சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகம் உத்தரவிட்டதாககூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை அறிந்த பாமக கட்சி திருமாவளவனை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளும் அரியலூர்,கொண்டம், ஆண்டி மடம் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் நல்ல செல்வாக்கு உள்ளது.
தேர்தல்களில் வெற்றி பெற்ற கூடுதல் பலம் சேர்க்கும் என்பதால் 1998 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது தலித் சமூகத்தை சேர்ந்த தலித் வேட்பாளர் ஏழுமலை என்பவரை தேர்வு செய்து வெற்றி பெற்றதை போன்று இந்த முறையும் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முனைப்புடன் பாமக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் எந்த கூட்டணியுடன் கூட்டணி வைத்தாலும் சிதம்பரம் தொகுதி மட்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஒரே கோரிக்கையில் இருப்பதாக தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.