டோக்வாண்டோ பயிற்சியாளர் (Physical Education Teacher) தர்மராஜன் மீது மாணவிகளை பொய் புகார் கொடுக்க கட்டாயப்படுத்திய இருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை அளிக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டோக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மீது 3 மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் தர்மராஜன் என்பவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இதையடுத்து நான் எந்த குற்றமும் செய்யவில்லை என சொல்லி தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தர்மராஜன் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரித்தனர் .
மாணவிகளிடம் தனி தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் அரவிந்த், பிரதீப் என இருவரின் கட்டாயத்தால் போலியாக புகாரளித்ததாக அந்த 3 மாணவிகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர்
பின்னர் நடனத்தை தெரிந்து கொண்ட நீதிபதிகள் உடற் கல்வி ஆசிரியர் தர்மராஜன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர் .
இதை அடுத்து மாணவிகளை புகாரளிக்க தூண்டிய இருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை அளிக்க பெரம்பலூர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
கண்ட 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என நிரூபித்த ஆக வேண்டும் என போராடிய அந்த
டோக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் இடம் நீதி மன்றமும் காவல் துறையினரும் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்.
பின்னர் கட்டாயத்தின் பேரில் தான் உங்கள் மீது பாலியல் புகார் கொடுக்க முன் வந்ததாக அந்த மாணவிகளும் உடற் கல்வி ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
Also Read : https://itamiltv.com/kilambakkam-should-be-changed-to-transport-hub/
இன்றைய நாளில் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை காட்டும் வாத்தியார்களே சில கீழ் தனமான செயல்களில் ஈடுபட்டு நல்ல ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயரை வாங்கி தருகின்றனர்.
இப்படி இருக்கும் சூழலில் தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து தான் நிரபராதி என போராடி விலகி வென்ற அந்த (Physical Education Teacher) உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.