திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை போடப்பட்ட நிலையில் தடையை மீறி திருப்பரங்குன்ற போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், வன்முறை தூண்டும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .