ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தலை தடுக்க சென்ற காவலர் மீது (Policeman killed) கார் ஏற்றி கொலை செய்த கும்பலை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திர மாநில காடுகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மதிப்புள்ள செம்மரம் இருப்பதாக கூறப்படுகிறது . இவற்றை முறையாக அரசிடம் அனும்பதி பெற்று சிலர் விற்று வந்தாலும் . பலர் திருட்டு தனமாக வெட்டி விற்கின்றனர் .
இந்த செம்மர கட்டைகளை வெட்டி கடத்தும் பணியில் ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது .
இந்த மரங்களை வெட்ட தமிழகத்திலிருந்து கூலித்தொழிலாளிகளை அழைத்து சென்று கடத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது .
இதில் ஆந்திர மற்றும் தமிழக எல்லைகளில் வாழும் பல அப்பாவி மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் அதிக கூலி கொடுத்து புரோக்கர்கள் ஆந்திர வனப்பகுதிக்கு அழைத்து சென்று இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட வைக்கின்றனர் .
இதில் எத்தனையோ அப்பாவிகள் காவல் துறையினரால் பிடிபட்டு கொல்லப்பட்டது மட்டுமின்றி, இன்னும் பலர் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு வருகின்றனர் .
இந்நிலையில் செம்மர கடத்தல் அதிகம் நடைபெறும் ஆந்திர வனப்பகுதியில் ஆந்திர போலீசார் என்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது அன்னமய்யா மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் போலீஸார் மீது ஏறிச் சென்றது. இந்த சம்பவத்தில் சிறப்பு அதிரடிப்படை காவலர் பி.கணேஷ் (30) சம்பவ இடத்திலேயே (Policeman killed) உயிரிழந்தார்.
இதையடுத்து காரில் தப்பித்த அந்த கும்பலாய் காவல் துறையினர் விடாமல் துரத்தினர்.சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் பிடிக்கப்பட்டனர்.
பிடிபட்ட அந்த காரில் இருந்து 7 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செம்மர கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது ஈவிரக்கமின்றி காரை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அன்னமய்யா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : https://itamiltv.com/pooranam-ammal-donated-the-land-again/
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் யார் எங்கிருந்து வந்துள்ளனர் கூலி ஆட்களோ அல்லது தொடர் கடத்தல் கும்பலா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .