சென்னை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசியல் தலைவர்கள், தனியார் நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேரிடர் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில், இன்று சன் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. கலாநிதிமாறன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் சங்கர், செயல் துணைத் தலைவர் திரு. கார்த்திக் ராஜசேகர் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநருமான திரு. அபாஷ் குமார், இ.கா.ப., செயலாளரும், காவல்துறை தலைவருமான (ஆயுதப்படை) திருமதி மு.வெ.ஜெய கௌரி, இ.கா.ப., ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் 9 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் திருமதி சாந்தி துரைசாமி, திரு. துரைசாமி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பொன்னுதுரை, இயக்குநர் திருமதி பி.அபிநயா ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்கத்தின் தலைவர் திரு.குமார் ஜயந்த், இ.ஆ.ப., துணைத் தலைவர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., இணை செயலாளர்கள் திரு.எஸ்.ஏ.ராமன், இ.ஆ.ப., திருமதி எஸ்.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்க உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. ஆசிரியர் கே.வி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள் சார்பில் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வைகோ அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சி நிதியும் சேர்த்து மொத்தம் 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.