தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.
அப்போதைய கால கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை , 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம் எல் எ.கள் மற்றும் எம்பி களை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், விசாரித்து இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை நேற்று முன் தினம் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து 2006 -2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருப்பது நிரூபணமாகியுள்ளதாக உள்ளது.
இந்த நிலையில்,பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.