அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழ பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் சேர்ந்து பங்கேற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார்.
பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று தமிழக அரசியலில் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரை ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலைகள் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கரூரைப் பூர்வீகமாக கொண்டவர்கள் இன்று வேறுபட்ட கட்சி மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுவதன் காரணமாக ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகின்றன.
எனினும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை ஒரே மேடையில் அபூர்வமான ஒன்றாகக் கருதப்படும் நிலையில் தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.