தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியதாவது :
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், பெற்றோர்கள் குழந்தைகளை கொள்வது என ஏராளமானவானவை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இதனை பொருட்டாக அரசு எடுக்கவில்லை யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இவ்வாறு போனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்.
Also Read: மொழியை முன்னிறுத்தி பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகளை கைவிடுங்கள் – பிரதமர் மோடி..!!
இந்த நிலையிலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொறுப்பு இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மீனவர்கள் பிரச்சனையை பொறுத்தவரையில் தீர்வு கிடைக்க கொஞ்ச காலம் ஆகலாம் என கூறிய பொன் ராதாகிருஷ்ணன் தமிழக அரசு மீனவர்கள் பிரச்னையை கனிவுடன் அணுக வேண்டும் தெரிவித்துள்ளார்.