Pongal festival : வரும் ஜனவரி 15ஆம் தேதி திங்கள் கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, இன்று முதல் 5 நாட்களுக்கு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : https://itamiltv.com/ration-shop-ops-insists-not-to-stop-palmolein-oil-toor-dal-distributiion-in-ration-shops-he-issued-a-statement-in-this-regard/
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை (Pongal festival) ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு முழுவதும் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில்,
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745794464348811645?s=20
நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் கோயில் திருவிழாக்களின் போதும், காணும் பொங்கல் அன்றும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள்,
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள்,
குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 9445014450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களில் அறியலாம்.
கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் தலா 5, தாம்பரம் சானடோரியத்தில் ஒன்று என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, tnstc இணையதளம் அல்லது செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.