போஜ்பூரி பின்னணி பாடகி( Bhojpuri singer)மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்திலுள்ள சப்ரா எனும் இடத்தில் தனியார் மேடை நிழ்க்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போஜ்பூரி (Bhojpuri ) மொழியில் பாடிவரும் பின்னணி பாடகி நிஷா உபாத்யாய் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பலரும் மேடையை நோக்கி பணத்தை வீசினர். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், பிரபல பாடகி(singer) மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் இடது தொடையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், பின்னணி பாடகி(singer) பாட்னாவிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தற்போது அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், இதுகுறித்து வெளியான வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.