இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..!

10 ஆண்டுகள் சிறைதண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் தர்ணா போராட்டம் நேற்று (டிசம்பர் 3) பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ் மாநில மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், விசிக-வின் தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவாரா, தமிழ்தேச மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த சதீஷ்,
NCHRO தேசிய தலைவர் பேராசிரியர் மார்க்ஸ், மதிமுகவை சேர்ந்த ஆவடி அந்திரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், சமாதான பேரவை மாநில தலைவர் ஹாமித் பக்ரி, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் அஷ்ரப், உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

போராட்டத்தின்போது  10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

M.முஹம்மது சேக் அன்சாரி

மேலும் இதுகுறித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ் மாநில மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எனவே எந்த பாரபட்சமுமின்றி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த தர்ணா போராட்டத்தில் கோவை சிறைவாசிகளின் குடும்பங்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Total
0
Shares
Related Posts