பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் இனி கட்சிப்பணியில் ஈடுபடமாட்டார் என கட்சி தலைமை அதிரடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்ப்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்த வருடம் ரவுடி கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையை உலுக்கிய இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Also Read : பன்றியின் சிறுநீரகத்துடன் வாழ்ந்த அமெரிக்கப் பெண் – சாதிக்கப் போராடும் மருத்துவர்கள்..!!
இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக ஆனந்தனும் , மாநில பொறுப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். குடும்பத்தை கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையிலும் பதவி விலக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.