Postal voting has started : இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய ஏற்பாடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.
முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த விருப்ப படிவங்கள் வாக்குச் சாவடிகள் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை அவர்கள் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் இன்று (04.04.2024) முதல் வழங்குகிறார்கள்.
அந்த விருப்ப படிவத்தை முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆனால் இது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள முதியவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணியானது இன்று ( 04.04.2024 ) காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதையும் படிங்க : சௌமியாவை அதிர வைத்த பாமக தொண்டர்! – என்ன கேட்டார் தெரியுமா?
மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம்.
தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. அதன்படி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிப்பார்கள்.
ஈரோட்டில் 3,054 பேர் விண்ணப்பித்த நிலையில், 3001 பேர் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும்,
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர்,
நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.
சென்னையில், 39,01,167 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் 11,369 பேர், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 63,751 பேர் என மொத்தம், 75,120 வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர் Postal voting has started.
85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின் போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சென்னையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது குறிப்பிட்த்தக்கது.
புதுச்சேரி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியை அதிகாரிகள் புதன்கிழமை தொடங்கினா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
85 வயதைக் கடந்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தபால் வாக்கை சேகரிக்கும் விதிமுறைப்படி வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அறியும் வகையில்,
வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வரும் 5-ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால், புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டுகளை அதிகாரிகள் வீடு, வீடாக விநியோகிக்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா். உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா, ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் இந்தப் பணியைத் தொடங்கிவைத்தனா்.
இதை வருகிற 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடக்கும் தபால் ஓட்டுகளை பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வரை நடந்துள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் ஆகியோர் செலுத்தும் தபால் வாக்குகளே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்துள்ளதால்,
இன்று தபால் வாக்கு துவங்குவதையொட்டி அவர்களின் வாக்குகள் யாருக்கு செல்கின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் அரசியல் ஆர்வலர்கள்Postal voting has started.