தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன் . இவரது இயக்கத்தில் ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கோமாளி படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .
முதல் படமே 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றதால் தயாரிப்பாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விட்டார் பிரதீப் .
எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க திடீரென ஹீரோவாக நடிக்கப் போவதாக பிரதீப் அறிவித்ததும், உங்களுக்கு எதுக்கு இந்த தேவையற்ற வேலை என பலரும் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ட்ரோல் செய்தனர். ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் அவர்மேல் கொண்ட நம்பிக்கையில் பிரதீப்பின் இரண்டாவது படத்தை தயாரித்தது .
ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஹிட் அடித்தது . இதனால் கோலிவுட்டின் ட்ரெண்டிங் ஹீரோவாகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.
லவ் டுடே கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியால் அவரை நம்பி படம் எடுத்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சில படங்கள் இயக்குவதாக பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் தளபதி விஜய்யின் கால்ஷீட் கிடைத்துள்ளது. தளபதியின் படத்தை இயக்குறீங்களா என அர்ச்சனா கல்பாத்தி முதலில் பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டதாகவும் ஆனால், பிரதீப் அந்த ஆஃபரை மறுத்து விட்டதாகவும் தற்போது ஷாக் கொடுக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க ஒப்பந்தமான நிலையில், நடித்தால் இனி ஹீரோ தான் என்றும் அப்படியே இயக்கினாலும் தனது படங்களை தானே இயக்கி நடிக்கும் முடிவில் பிரதீப் உள்ளதாகவும் கூறப்படுகிறது .
இதனால் சற்று காண்டான தளபதியின் ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனை பாரபட்சமின்றி ட்ரோல் செய்து வருகின்றனர் .என்னதான் இருந்தாலும் பிரதீப் இந்த முடிவை சற்று யோசித்து எடுத்திருக்கலாம்.