கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஷாருக்கான் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பதான் (pathaan) திரைப்படம் வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில், பதான் (pathaan) திரைப்படம் இந்தியா முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது. படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வந்த நிலையில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியதும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.
இதனையடுத்து, இடதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
ஆனால், தற்போது பதான் திரைப்படத்தின் மொத்த வசூல் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 419 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் பதான் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடம் பிடித்ததோடு சல்மான்கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ மற்றும் அமீர்கானின் ‘தங்கல்’ ஆகிய படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், பதான் படம் குறித்து பேசுகையில், பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா “குரைப்பவர்கள்”, “கடிக்கமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
பதான் திரைப்படத்தை தடை செய்ய கோரி போராட்டங்கள் நடத்திய நிலையில், படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மதவெறியர்கள் காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படத்தை எடுத்தார்கள். மேலும், படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் அவர்களை துப்பினார்கள்.
அதன் பின்னரும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வரவில்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய டைரக்டர் இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை? என்று கேட்டிருக்கிறார். ஆனால், ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது என்று பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/shahrukhdevdas2/status/1622215595188944897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1622215595188944897%7Ctwgr%5E52cbe9cefacf742300120eff81c5f7c91eaaa31e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fibctamilnadu.com%2Farticle%2Fprakash-raj-says-about-boycott-pathaan-1675760869