முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் வெட்கக்கேடானது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் தேமுதிக பிரமுகர் பெட்ரோல் நிரப்பும் மையம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் குத்து விளக்கேற்றி விற்பனை மையத்தின் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடான நிலையில் உள்ளதாகவும் கொலை கொள்ளை பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், இதற்குக் காரணம் தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் போதை கலாச்சாரமே இந்த கலாச்சாரம் மாணவர் இடமும் பரவி உள்ளது வேதனைக்குரியது.
இதனை முற்றிலும் ஒழிக்கத் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது மதுரையில் தமிழக அரசு எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் ஒரு வெட்கக்கேடான விஷயம் என்றும் இதற்குத் தமிழக அரசு தலை குனிய வேண்டும் என்று தெரிவித்த அவர்,
முன்னாள் முதல்வர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றால் எத்தனையோ வழக்குகள் உள்ளதாகவும் இதுபோன்ற அற்பத்தனமான வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு தன்னுடைய கீழ்த்தரமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதற்காகத் தமிழக அரசு வெட்க தலை குனிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் என்எல்சி விவகாரத்தில் முதன் முதலில் குரல் கொடுத்தது தேமுதிக தான் என்றும் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் அதனைத் தடுக்க கேப்டன் விஜயகாந்த் சட்டமன்றமாக உறுப்பினராக இருந்தபோது இந்த பிரச்சனை குறித்து அதன் நிறுவனத் தலைவரிடம் தேமுதிக சார்பில் மனு கொடுக்கப்பட்டதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தியதும் தேமுதிக தான் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த விவகாரத்தில் ஒரு சமூகத் தீர்வு காணப்படவில்லை எனில் தேமுதிக களத்தில் இறங்கி போராடும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று நடிகர சங்கத்திற்கு விஜயகாந்த் எப்போதும் உறுதுணையாக இருப்பார் எனவும் தெரிவித்தார்.