குடியரசு தின விழாவை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதாக 1,132 காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் (President’s Award) வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1750750130335351225?s=20
இதன்படி இந்த ஆண்டு மொத்தம் 1,132 காவலர்களுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் சிறந்த சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த மூன்று போலீசார் ஜனாதிபதி பதக்கத்தை பெறவுள்ளனர்.
இதையும் படிங்க : Aayi ammal-லுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!
அதேபோல, குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 26 போலீசாரின் பணியை பாராட்டி மத்திய அரசின் விருதுகளும் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகைசால் பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையத்தை சேர்ந்த தளவாய் ராஜசேகரன், லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. லலிதா லட்சுமி, ஈரோடு சிறப்பு அதிரடி படை சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்
ஜனாதிபதி விருது (President’s Award) வழங்கப்பட உள்ள தமிழக காவலர்கள் 21 பேரின் பெயர் விபரம்..!
- லோகநாதன் – மதுரை போலீஸ் கமிஷனர்.
- நரேந்திரன் நாயர்- தென்மண்டல ஐ.ஜி., மதுரை.
- ரூபேஷ்குமார் மீனா- பணி அமைப்பு ஐ.ஜி., சென்னை.
- அண்ணாதுரை- திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு.
- செங்குட்டுவன்- திருப்பூர் மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர். குற்றப்புலனாய்வு துறை
- தேவேந்திரன் – வேலூர் குற்றப்புலனாய்வு மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர்.
- செல்லத்துரை- நீலகிரி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
- மணி- ராஜப்பாளையம் சிறப்பு காவல் படை இன்ஸ்பெக்டர்.
- ராஜகோபால்- தஞ்சை குற்ற பிரிவு புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்.
- அழகுதுரை- மதுரை சிறப்பு படை உதவி படை தலைவர்.
- பழனிவேல்- சென்னை குற்றப்புலனாய்வு துறை இணையவழி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
- மோகன்பாபு – சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- வெங்கடேசன் – குற்ற புலனாய்வுத்துறை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
- ராயமுத்து- தேனி குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.
- அனில்குமார்- சென்னை மாநில குற்ற ஆவண காப்பக கம்ப்யூட்டர் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- ஈஸ்வரன் – நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- சாலமோன் ராஜா- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
- அருள்முருகன்- நாமக்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- குணசேகரன் – சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- சுந்தரம்- சென்னை மாநில குற்ற ஆவண காப்பகம் கம்ப்யூட்டர் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- வெங்கடேசன்- தஞ்சை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.
- சென்னை மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி தகைசால் பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.