தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான பாட புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ₹30 முதல் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 – 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 – 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு புத்தகம் ₹40 – ₹70 வரையும், 9 – 12 வகுப்பு புத்தகங்கள் ₹50 – 80 வரையும் உயர்வு. ஒருசில புத்தகங்கள் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Also Read : வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி தொடக்கம்
காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் இன்று வரை மாணவர்கள் பயின்று வரும் பள்ளி பாடப்புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் பட புத்தகங்களின் விலை உயர்வு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுமட்டுமின்றி இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.