கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க சென்னை(Chennai) வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்கள் உட்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.
இதையும் படியுங்க : Netflix-ல் வெளியாகும் சலார் -எப்போது தெரியுமா?
இதற்கிடையே கடந்த ஜன.4-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி விமானம் வாயிலாக சென்னை (Chennai) வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமைசர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐஎன்எஸ் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்லும் பிரதமர் மோடி. அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.
இந்நிலையில், சிவானந்த சாலையில் பாஜகவினர் பிரதமரை வரவேற்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலைப் போன்று வடிவமைப்பையும் ராமர் சிலையும் அமைத்து குழந்தைகள் வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
https://x.com/ITamilTVNews/status/1748321134553206954?s=20
மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், குழந்தைகளின் பரதநாட்டியம், செண்ட மேளம், நாதஸ்வரம் என பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்க பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.