Modis Speech At Kanyakumari : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தமிழ் நாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று 5வது முறையாக தமிழ் நாடு வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : ”கன்னியாகுமரி வந்த பிரதமர்..”டிடிவி தினகரனுடன் சந்திப்பு?
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
ஹெலிகாப்டர் மூலமாக அரசு விருந்தினர் மாளிகை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் சென்றார்.
அங்கு பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர் பேசியிருப்பதாவது Modis Speech At Kanyakumari..
- தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
- வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும்.
- கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும்.
- தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது.
- ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
- ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.
- மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது.
- பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டுவந்தோம்; ஆனால் INDIA கூட்டணி 2ஜியில் ஊழல் செய்தது; 2ஜி ஊழல் முறைகேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுகதான்.
- நாங்கள் உதான் திட்டத்தை கொண்டுவந்தோம்; அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள்.
- கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்; காமன்வெல்த் போட்டியில் காங். ஊழல் செய்தது
- திமுக-காங்கிரஸ் ‘INDIA’ கூட்டணியால் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது.
- ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காக கொண்டுள்ளது திமுக-காங்கிரஸ் கூட்டணி.
- திமுக, காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என தெரிவித்துள்ளார்.