திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை பொதுமக்களே பிடித்த புரட்டி எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் பள்ளி மாணவி தெரிவித்துள்ளார் .
இதையடுத்து உடனே மகளுடன் பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை சூறையாடி அங்குள்ள CCTV காட்சிகளை காண்பித்து குற்றவாளியான பள்ளி தாளாளரின் கணவரை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
Also Read : தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்..? – விஜய் சாடல்..!!
பின்னர் தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்து அவனிடம் தீவிர விசாரனனி மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மேலும் 3 பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . தலைமறைவாக உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில்
தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.