காசோலை மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை மதுரை விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலணியில் வசித்து வரும்பழனிச்சாமி நாடார் என்பவரின் மகனாகிய சக்கரவர்த்தி என்பவருக்குச் சொந்தமான சசி புரடொக்சன் பட நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவரும் தற்சமயம் மதுரை அண்ணா நகரில் வசித்து வருபவருமான சங்கரன் பிள்ளை என்பவரின் மகனும்
எஸ்.எஸ்.வி. என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளருமான ஆறுமுகப்பில்லை என்பவர் தனது திரைப்படத் தயாரிப்பு தொழில் விருத்திக்காகக்
கடந்த 23.7.2013 ம் தேதி சக்கரவர்த்தியை அவரது இல்லத்தில் சந்தித்து
ரூ .14,00,000 / – ரூபாய் பதினான்கு இலட்சம் மட்டும் கடனாகப் பெற்று இருக்கிறார்.
மேலும் பெற்று கொண்ட கடனுக்கு ஆதரவாகச் சிவகங்கை குளிரி.ஐ.சி.ஐ வங்கி காசோலையில் ரூபாய் பதினான்கு இலட்சம் என நிரப்பி 25.10.2013 ம் தேதியிட்டு ” சசி புரொடெக்சன் ” என்ற பெயருக்குக் கொடுத்துள்ளார். மேலும் ஆறுமுகம் பிள்ளையின் வேண்டுதலின் பேரில்அந்த காசோலையைச் சக்கரவர்த்தி
06.11.2013ம்தேதி தான் கணக்கு வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி , சிம்மக்கல் கிளையில் 06.11.2013 ம் தேதி இவ்வழக்கு காசோலையை வசூலுக்குத் தாக்கல் செய்ததில், ஆறுமுகம் பிள்ளையின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துள்ளது.
இது குறித்து பலமுறை ஆறுமுகம் பிள்ளையிடம் பணம் கொடுத்த சக்கரவர்த்தி நேரில் சென்று கேட்ட பொழுது மேற்படி நபர் ஏமாற்றும் நோக்கத்தோடு அலைக் கழித்ததுடன் கடந்த 29-11-2013 அன்று வழக்கறிஞர் மூலம் சக்கரவர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியதின் பேரில் சக்கரவர்த்தி
மதுரை விரைவு நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களுடன் வழக்கு தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றமும் பல்வேறு சாட்சிகளையும் ஆவணங்களையும் சரிபார்த்து ஆறுமுகம் பிள்ளை மீதான குற்றம் நிரூபிக்கபட்டது.
மேலும் சட்டப் பிரிவு 138 ன் கீழ் ஆறுமுகம் பிள்ளை குற்றவாளி என முடிவு செய்து சக்கரவர்த்திக்குத் தரவேண்டிய பதினான்கு இலட்சத்தினை இரண்டு மாத கால அவகாசத்திற்குள் திருப்பி வழங்கிட அறிவுறுத்தியும் மேலும் குற்றவாளிக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.