பழம்பெரும் தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்துள்ளார் எம் முத்துராமன்
குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நவரச நாயகன் கார்த்திக் நடித்த ’ராஜமரியாதை’ ரஜினிகாந்த், லதா நடித்த ’ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த ’ஒரு வீடு ஒரு மனிதன்’ என்ற படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எம். முத்துராமன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பழம்பெரும் தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்களின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்