அண்ணாமலை Property value of Annamalai, எல்.முருகன் ஆ.ராசாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது வேட்பு மனு தாக்கலின் போது அளித்த சொத்து விவரம் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : விசிகவுக்கு பானை சின்னம்.. நஹி சொன்ன தேர்தல் ஆணையம்!!
அண்ணாமலையின் சொத்து விவரம் வருமாறு Property value of Annamalai :
கையிருப்பு ரொக்கம் ரூ.5.11 லட்சம். வங்கி இருப்பு ரூ.25,30,492. பங்குச் சந்தை முதலீடு ரூ.60 ஆயிரம். ரூ.5 லட்சம் மதிப்பிலான ஹோண்டா சிட்டி கார். ரூ.1.12 கோடி மதிப்புள்ள 62.73 ஏக்கர் விவசாய நிலம். மனைவி அகிலாவிடம் கையிருப்பு ரொக்கம் ரூ.1.56 லட்சம். வங்கி இருப்பு ரூ.1,14,73,275. பங்குச் சந்தை முதலீடு ரூ.1,65,150.
சேமிப்புத் திட்ட முதலீடு ரூ.68,130. ரூ.20,48,000 மதிப்பிலான 320 கிராம் தங்க நகை. கோவை செலக்கரிச்சல் கிராமத்தில் ரூ.53 லட்சம் மதிப்பிலான 0.8 ஏக்கர் விவசாய நிலம். மகள் ஆராதனா பெயரில் ரூ.3,10,450 மதிப்பில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட முதலீடு.
மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான எல்.முருகன் சொத்துவிவரம் வருமாறு:
ரூ.1,01, 02, 369 மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ.16,00,000மதிப்பிலான அசையா சொத்துகள். கையிருப்பு ரொக்கம் ரூ.50,000. டெல்லி கனரா வங்கியில் ரூ.61, 694 டெபாசிட், டெல்லி எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.22,44 ,829 டெபாசிட்.
சைதாப்பேட்டை இந்தியன் வங்கியில் ரூ.11,516 டெபாசிட். எல்.ஐ.சி மற்றும் தனியார் நிறுவனனங்களில் ரூ.60,38,846க்கு காப்பீடு.
ரூ.5லட்சம் மதிப்பிலான மாருதி சுசுகி ஸ்விப்ட் கார். ரூ.11லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்க நகை, டெல்லி எஸ்.பி.ஐயில் ரூ.20 லட்சம் கடன், மனைவி கலையரசி கையிருப்பு ரொக்கம் ரூ.72000. கீழ்பாக்கம் எஸ்.பி.ஐ; வங்கியில் ரூ.7,98,515 டெபாசிட்.
எல்ஐசி மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.46,35.000 காப்பீடு; ரூ. 40,000 மதிப்பிலான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். ரூ.33 லட்சம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகை; அண்ணாநகர் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.90 லட்சம் கடன், மற்றொரு வங்கியில் ரூ.10 லட்சம் கடன்
நீலகி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆண்டிமுத்து ராசாவின் சொத்து விவரம் வருமாறு; –
வங்கி இருப்பு தொகை, வைப்பு தொகை காப்பீடு, வாகனம் உட்பட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரத்து 894.
மகள் மயூரியின் பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.2 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 218 உள்ளது. ராசாவுக்கு சொந்தமாக 108 பவுன் தங்கம் மற்றும் 4.182 கிலோ வெள்ளி, மகளுக்கு சொந்தமாக ரூ.1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து 972 மதிப்பில் தங்க நகைகள், ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர கம்மல் மற்றும் நெக்லஸ் உள்ளன.
மயூரியின் பெயரில் ரூ.15 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான 10.53 ஏக்கர் நிலம் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ளது. பெரம்பலூரில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரம்பரை வீடு உள்ளது. கூட்டுக் குடும்ப சொத்து ரூ.9 லட்சத்து 79 ஆயிரத்து 58 மதிப்பில் உள்ளது.
இதையும் படிங்க : விஜய் கடவுள் மாதிரி.. கேரளா சிறுவனின் பெற்றோர் நெகிழ்ச்சி பேட்டி!