இந்திய திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பல மாஸ் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் . கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக இருந்து முன்னணி ஹீரோவாக வளர்ந்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து 72 வயதிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார் .
இதுவரை பெரிதாக கேமியோ ரோலில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் செல்ல மகளின் ஆசைக்காக கேமியோ ரோலில் நடிக்கிறார் .

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது . அதற்கேற்ப இப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்து வருகிறார்கள். அவர்கள் இருவருமே நிஜத்தில் ஸ்டேட் கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் காட்சிகளை பார்த்து பார்த்து படமாக்கி வருகிறார் ஐஸ்வர்யா. தந்தையை முதல் முறை இயக்குவதால் ரஜினி நடிக்கும் மொய்தீன் பாய் கதாபாத்திரம் செம மாஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
புதுச்சேரியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் போர்ஷன் படமாக்கப்பட்டு வருவதால் தற்போது புதுவையில் தங்கியுள்ள சூப்பர் ஸ்டாரை காண ரசிகர்கள் திரண்டுள்ளனர் . படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் செல்போன் டார்ச்சை ஆன் செய்து ஆரவரத்தில் புதுவையை அதிரவிட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் கார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற முடியாதபடி ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். நேரம் ஆக ஆக ரசிகர்கள் கூட்டமும் அதிகமானதால் அங்கு வந்த காவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்த, ஒருவழியாக ரஜினியின் கார் அங்கிருந்து வெளியேறியது.
அப்போது ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே காரின் ரூஃப் டாப் வழியாக முகம் காட்டிய ரஜினிகாந்த், சுற்றி நின்றுகொண்டிருந்த ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். இதனை அவரது ரசிகர்கள் வீடியோவாக எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ…