புனேவில் தொழிலதிபரின் மகன் தலைக்கேறிய போதையில் சொகுசு காரை ஓட்டி ஏற்படுத்திய ( bail revoked ) விபத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புனேவில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை சொகுசு கார் விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தலைக்கேறிய மது போதையில் காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை பிடித்த பொதுமக்கள் மரண அடிகொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர் .
Also Read : ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!!
பின்னர் சிறார்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை விசாரித்து அவனுக்கு பெற்றோர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது . இதையடுத்து சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டது .
போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும். எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர் .
விபத்து நடந்த சில மணி நேரங்களில் சிறுவனுக்கு ஜாமீன் கிடைத்த சம்பவம் பலரால் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார் .
இதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறுவனின் பெற்றோர் தரப்பில் நஷ்டஈடு ( bail revoked ) கொடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.